150-வது மயிலை கயிலை பெளர்ணமி பக்தி வலம்
150-வது மயிலை கயிலை பெளர்ணமி பக்தி வலம் இன்று, 10-6-2025, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமோகமாக நடைபெற்றது. அடியேன் கலந்துக் கொண்டது பாக்யமாக கருதுகிறேன். இந்த பக்தி வலம் நிகழ்ச்சியானது 2013-ம் ஆண்டிலிருந்து பெளர்ணமி தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று 150-வது நிகழ்வு. ஆலய உள்பிரகாரம் மற்றும் நான்கு மாட வீதிகளிலும் பக்தி பாடல்களுடன் பிரதக்ஷிணம். கண் கொள்ளா காட்சி. ஈசனின் அருள் அனைவருக்கும்.