கங்கை – நமது நாட்டின் வரலாற்றிக்கும் சாக்ஷியாக அல்லவா அவள் இருக்கிறாள்
யுகம் யுகங்களாக எண்ணற்ற முனிகளும், மகான்களும், ரிஷிகளும் தபஸ் செய்த இடம் அல்லவா இந்த கங்கை கரை. நமது பாவங்களை போக்குகிறாள் கங்கை. கங்கை கரையில் அமர்ந்து கங்கையை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அப்போது மனதில் ஏற்படுகின்ற ஆனந்தத்திற்கு எல்லை இல்லை.
நமது நாட்டின் வரலாற்றிக்கும் சாக்ஷியாக அல்லவா அவள் இருக்கிறாள்.
கடவுளின் ஆசியும் , விடாப்பிடியும் இருந்தால் நாம் தேர்ந்தெடுத்த பாதையில் நம்மால் நிச்சயம் செல்ல முடியும். லக்ஷியத்தை அடைய முடியும் என்பதற்கு கங்கை ஒரு சாக்ஷி