சிறிய வயது. கிட்டத்தட்ட 35 வயது இருந்தால் அதிகம். என்ன ஒரு மன உறுதி. வைராக்யம். ஆன்மீக ஈடுபாடு. பிரமிப்பாக உள்ளது.
கேதார்நாத் நோக்கி பாத யாத்திரை. கிட்டத்தட்ட 1440 கிலோ மீட்டர். காலில் செருப்பும் கிடையாது. வெயில், மழை மற்றும் பல அசெளகரியங்கள். எதுவும் அவரது லக்ஷிய பாதையிலிருந்து அவரை அகல செய்யவில்லை. மனதில் அப்பன் சிவ ஸ்மரனை.
கை செலவுக்கு சிறிது பணம் தர முயற்சித்தோம். புன்முறுவலுடன் மறுத்து விட்டார் என்பது மேலும் ஒரு தகவல்.