அமர் சேவா சங்கம் ஆயக்குடி ஸ்ரீ ராமகிருஷ்ணன்
அமர் சேவா சங்கம் ஆயக்குடி ஸ்ரீ ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து போன் கிட்டத்தட்ட இன்று 7.30 மணி மாலை.
சர்மாஜி, நமஸ்காரம். நான் ராமகிருஷ்ணன்
“செளக்யமா? எங்கே இருக்கேள்”
சென்னையில் உங்களது ஃப்ளாட் வாசலில்
தூக்கிவாரிப் போட்டது. வாசலுக்கு ஓடினோம் நானும் எனது மனைவியும்.
அவசரமாக சென்று கொண்டிருந்த அவர் எங்கள் இல்ல விலாசம் தேடி வந்தது எங்கள் பாக்யம்.
அவரது கார் கிளம்பும் சமயத்தில் ஆயக்குடி முருகன் பிரசாதம் எங்களுக்கு அளிக்க மறக்கவில்லை அவர்.
அவரைப் பார்த்தாலே நமக்கு உற்சாகம் அதிகமாகும். சமுதாய பணியில் மேலும் ஈடுப்பட உத்வேகம் உண்டாகும்.
பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’ வாக்யம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த சரீரமே கேள்விக்குறியாக இருந்தும் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சமுதாய பணியில் அபார சேவை செய்து வருகிறார் ராமகிருஷ்ணன் அவர்கள். எனது ஆதர்ஸம். வழிகாட்டி.