1970 - கன்யாகுமரி ஜில்லா தக்கலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு.: சர்மா சாஸ்திரிகள்

கிட்டத்தட்ட நானே மறந்துவிட்ட பழைய அனுபவத்தை நினைவுப்படுத்திய முன்னால் ஆர்எஸ்எஸ் பிரசாரக்கும் தற்போது சேவா பாரதியில் பணி ஆற்றிவரும் அன்பு சுந்தர லக்ஷமணனுக்கு நன்றிகள் பல. அந்த காலம் 70-களில். கன்யாகுமரி மாவட்டம். ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்களின் அராஜகம். மறுபக்கம் கிருஸ்துவர்களின் மதமாற்ற செயல்கள். அதன் நடுவில்தான் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்களின் தேசிய பணி தொடர்ந்தது. பல இன்னல்கள். போராட்டங்கள். ஆனால் பயம் அறியாத தன்னலமற்ற ஸ்வயம்சேவகர்களால் குமரி மாவட்டத்தில் சங்கம் வளர்ந்தது. இந்த காலகட்டத்தில் தான் குமரியில் மானனீய ஸ்ரீ ஏகநாத்ஜி வழிகாட்டுதலில் பிரஹ்மாண்டமான விவேகானந்த பாறையில் நினைவு சின்னமும் எழும்பியது.

  • Post category:Video